உலகம்

காலத்தை உறைய வைத்த 'முத்தப்  புகைப்படம்':  காற்றில் கலந்த ஒரு உயிர்!

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற  'முத்தப்' புகைப்படத்தில் இடம்பெற்ற செவிலியரான க்ரெட்டா ப்ரீட்மான் மரணமடைந்தார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற  'முத்தப்' புகைப்படத்தில் இடம்பெற்ற செவிலியரான க்ரெட்டா ப்ரீட்மான் மரணமடைந்தார்.

1945-ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததோடு, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் நியூயார்க் சதுக்கத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்ட பொழுது, அங்கு திரண்டிருந்த மக்கள்  அதை உற்சாகமாக கொண்டாடினர்.

அதன் ஒரு பகுதியாக அங்கு இருந்த அமெரிக்க கப்பல் படைவீரர் ஜார்ஜ் மென்டோன்சா, அப்போது  அருகில் இருந்த க்ரெட்டா ப்ரீட்மானை  கட்டி அனைத்து முத்தமிட்டார். 21 வயதான க்ரெட்டா அந்த சமயத்தில் பல்மருத்துவத்துறை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த காட்சி புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ஆல்பிரட் ஐசன்ஸ்டட்டால் புகைப்படமாக எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் சில வாரங்கள்  கழித்து புகழ் பெற்ற  லைஃப்' பத்திரிக்கையின் அட்டைப்படமாக இந்த படம் வெளியாகி, அகில உலகப்புகழ் பெற்றது. ஆனால் நெடுங்காலம் அவர்கள் இருவரும் யார் என்ற விபரம் தெரியவில்லை. நெடுங்காலத்திற்குப் பிறகே அந்த விஷயம் வெளியானது.         

இந்நிலையில் 92 வயதான ப்ரீட்மான் சனிக்கிழமை அன்று விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட்டில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையம் ஒன்றில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவருடைய மகன் ஜோஸ்வா உறுதி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமுளி அருகே தம்பதி மீது தாக்குதல்: கேரளத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டு மாடியில் உண்ணாவிரதம் இருந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் கைது

SCROLL FOR NEXT